வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் - பார்வையற்றவரிடம் ரூ.75 லட்சம் மோசடி

வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகார் குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முஸ்தாக் அகமது, வாகன விபத்தில் கண்பார்வையை இழந்தவர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இருவர், முஸ்தாக் அகமதுவை அணுகி, துபாய், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு அழகுசாதன பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் தங்கள் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாக கூறி சுமார் 75 லட்சம் ரூபாய் வரை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் திருப்பித் தராமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு முஸ்தாக் அகமது தபால் மூலமாக புகார் அனுப்பியுள்ளார். இதையடுத்து ஆம்பூர் காவல்நிலையத்தில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில், பணத்தை மீட்டு தருமாறு முஸ்தாக் அகமது கதறி அழுத‌து அங்கிருதவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்