ஃபாக்ஸ்கான் : ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளை கண்காணிக்க குழு அமைப்பு

ஃபாக்ஸ்கான் நிறுவனம் நாளை உற்பத்தியை தொடங்கவுள்ள நிலையில், ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளை கண்காணிப்பதற்காக வருவாய் துறை சார்பாக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
x
ஃபாக்ஸ்கான் : ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளை கண்காணிக்க குழு அமைப்பு ஃபாக்ஸ்கான் நிறுவனம் நாளை உற்பத்தியை தொடங்கவுள்ள நிலையில், ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளை கண்காணிப்பதற்காக வருவாய் துறை சார்பாக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஐபோன்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்துவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகப் புகார் எழுந்ததையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.இதனை தொடர்ந்து அமைச்சர்கள் பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் தலைமை செயலாளர் தலைமையில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் நாளை உற்பத்தியை தொடங்குகிறது. முதல் கட்டமாக பணிக்கு திரும்பியுள்ள 62 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்தவுடன் அவர்கள் நாளை உற்பத்தியில் இறங்கவுள்ளனர். இந்த நிலையில் பணிக்கு வரக்கூடிய தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பிறகே பணிக்கு அனுப்பப்படுவார்கள் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை சார்பாக விடுதிகளை கண்காணிப்பதற்கும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் சுத்தமான உணவு ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்