குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்.. எப்படி கையாள வேண்டும்? டிஜிபி அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்.. எப்படி கையாள வேண்டும்? டிஜிபி அறிவுறுத்தல்
x
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்.. எப்படி கையாள வேண்டும்? டிஜிபி அறிவுறுத்தல் 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை எப்படி கையாள வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தி உள்ளார். பாலியல் ரீதியாக பாதித்த குழந்தைகளை மீட்டு உடனடியாக மருத்துவ உதவி அளிப்பதுடன், மன நல ஆலோசகர் ஒருவரை நியமிக்க வைத்து, விசாரிக்க வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.குடும்ப உறுப்பினர் மற்றும் உறவினர் மூலம் பாலியல் குற்றம் நடந்திருந்தால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவலளிக்க வேண்டும் என குறிப்பிட்ட டிஜிபி,அந்தக் குழந்தையை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் வைக்கவும், புகார் கிடைத்த அரை மணி நேரத்தில் விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.பாதித்த குழந்தைகளின் உறவுகளிடம் இருந்து எழுத்துப் பூர்வ புகார் பெற்று உடனடியாக சி.எஸ்.ஆர் வழங்க கூறியுள்ள டி.ஜி.பி,குழந்தைகள் விரும்பும் இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும், சாதாரண உடை அணிந்து வாக்குமூலம் பெற வேண்டும், விசாரணையில், ஆலோசகர் உடனிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.24 மணி நேரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து அதன் நகலை பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கவும்,பாலியல் வழக்கில் பாதித்த குழந்தைகள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்