எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
  
அதன்படி, மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திரா செல்லும் பேருந்துகளும் கே.கே.நகர். மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அதேபோல், தாம்பரம் பேருந்து அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சை செல்லும் பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வந்தவாசி, நெய்வேலி, கடலூர், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி செல்லும் பேருந்துகளும் மற்றும் செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
 
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருத்தணி செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, நாகை, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை, திருவனந்தபுரம்,பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்