கள்ளக்குறிச்சியில் தனித்து விடப்பட்ட 4 வயது சிறுவனை கூழ் விற்கும் பெண் ஒருவர் தன் மகனை போல அரவணைத்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் தனித்து விடப்பட்ட 4 வயது சிறுவனை கூழ் விற்கும் பெண் ஒருவர் தன் மகனை போல அரவணைத்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் கலா என்ற பெண் கூழ் விற்பனை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இவரின் கடைக்கு கூழ் குடிக்க வந்த நபர் 4 வயது சிறுவனையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். அப்போது கூழை குடித்த பிறகு சிறுவனை அங்கேயே விட்டு விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. உடனே கலா, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த சிறுவனுக்கு போலீசார் 2 உடைகளை வாங்கிக் கொடுத்து மீண்டும் கலாவிடமே ஒப்படைத்துள்ளனர். சிறுவனை விட்டுச் சென்றவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் சிறுவனை தன் குழந்தை போல பாவித்து பார்த்துக் கொள்கிறார் கலா. அவரின் சொல்பேச்சை கேட்டு சிறுவன் நடந்து கொள்வதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுவனை விட்டுச் சென்றவர்களை கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில் அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.