பிரபலமாகி வரும் காணியின மருத்துவமுறை "2500 வகையான மூலிகைகள் உள்ளன" - சித்த மருத்துவர்

பிரபலமாகி வரும் காணியின மருத்துவமுறை "2500 வகையான மூலிகைகள் உள்ளன" - சித்த மருத்துவர்
x
பிரபலமாகி வரும் காணியின மருத்துவமுறை "2500 வகையான மூலிகைகள் உள்ளன" - சித்த மருத்துவர் 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணியின மலைவாழ் மக்களின் மருத்துவமுறையை பெற பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையார், சின்ன  மயிலாறு, பெரிய மயிலாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் வசிக்கும் காணியின மக்கள், பெரும்பாலும் இயற்கை சிகிச்சை முறையையே பின்பற்றுகின்றனர். காணியின சிகிச்சையைப் பெற, பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வருகை தருகின்றனர். இதுகுறித்து சித்த மருத்துவர் பிச்சாண்டி கூறுகையில், தலைமுறை தலைமுறையாக தங்களது குடும்பம் மருத்துவம் பார்த்து வருவதாகவும், தன்னிடம் இரண்டாயிரத்து ஐநூறு மூலிகைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்