ஊறுகாய் பாக்கெட்டில் செத்து கிடந்த பூரான் - உணவுக்காக பாக்கெட்டை பிரித்த போது அதிர்ச்சி
பதிவு : ஜனவரி 09, 2022, 07:21 PM
சிவகாசியில் பிரபல நிறுவனத்தின் ஊறுகாய் பாக்கெட்டில் செத்துக்கிடந்த பூரானால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிவகாசியில் பிரபல நிறுவனத்தின் ஊறுகாய் பாக்கெட்டில் செத்துக்கிடந்த பூரானால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் குடியிருப்பவர் செல்வின். இவரது மைத்துனர் எபனேசர் வழக்கம்போல சாப்பாட்டுக்காக ஊறுகாய் வாங்கி வந்துள்ளார். செல்வின் உணவு சாப்பிடும் போது அந்த பிரபல நிறுவனத்தின் ஊறுகாய் பாக்கெட்டை பிரித்துள்ளார். அப்போது, அந்த பாக்கெட்டில் இறந்த நிலையில் விசத்தன்மை கொண்ட பூரான் ஒன்று இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து பல்வேறு தரப்பினருக்கும் அதனை பகிர்ந்துள்ளார். மேலும், ஊறுகாயில் பூரான் கிடந்தது தொடர்பாக செல்வின் உணவுப்பாதுகாப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார். சுகாதாரம் இல்லாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டுவரும் பிரபல ஊறுகாய் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

451 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு ! | #ThanthiTv

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நூலகம், ஆராய்ச்சி கூடங்களை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர்

12 views

திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

27 views

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் கொண்டாட்டம் : அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை

அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை விழா இன்று கொண்டாடப்படுகிறது

21 views

"பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.." - அமைச்சர் அதிர்ச்சி தகவல்

"பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.." - அமைச்சர் அதிர்ச்சி தகவல்

92 views

ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 3 சிறுமிகள் ! ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழப்பு..! | #ThanthiTv

திருவண்ணாமலையை அடுத்த சு.கம்பப்பட்டு கிராமத்தை சோந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் ஆடுகளை குளிப்பாட்டுவற்காக அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.