ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் நபர்களை எச்சரித்து அனுப்பும் போலீசார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.
x
வெறிச்சோடிக் காணப்படும் சாலைகள் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 

வேலூர் மாவட்டம் குடியாத்தம், உலகமெங்கும் அச்சுறுத்திவரும் கொரோனவைரஸ் மூன்றாம் அலை தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள்  தொற்று வேகமாக பரவி வருகிறது 

தமிழக அரசு கொரோனோ சமூக பரவலை தடுக்க இரவு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குக்கு அரசு அறிவித்துள்ளது

 இதனிடையே முதல் ஞாயிறு ஊரடங்கான இன்று குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு விதிகளையும் மீறி இருசக்கர வாகனத்தில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களை தடுத்து நிறுத்திய குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினர்

 கொரோனா சமூக பரவலை தடுக்க கட்டாயம் ஊரடங்கு பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர் மேலும் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர் மேலும் ஊரடங்கு காரணமாக சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது குடியாத்தம் காவல் உட்கோட்ட பகுதியில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்