"தமிழகத்தில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் புதிதாக  10 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் நேற்றைய மெகா தடுப்பூசி முகாமில் 17 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 9 கோடி42 ஆயிரத்து 20 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும்15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி பணிகளில் விரைந்து செயல்பட உத்தரவிட்டுள்ளாதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் நாளை முதல் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்