வளர்த்தவரை தேடி வந்த பாசக்கார பூனை - கட்டியணைத்து முத்தமிட்ட உரிமையாளர்
பதிவு : ஜனவரி 09, 2022, 03:43 AM
விழுப்புரம் அருகே, பாசக்கார பூனை15 கிலோ மீட்டர் பயணித்து உரிமையாளரை வந்தடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே, பாசக்கார பூனை15 கிலோ மீட்டர் பயணித்து உரிமையாளரை வந்தடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் சோழன் தெருவை சேர்ந்த கென்னடி 
என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டிற்கு அடைக்கலம் தேடி பசியில் வந்த பூனையை  வளர்த்து வந்தள்ளார். மிகவும் பாசத்துடன் குழந்தை போல்  வளர்த்து வந்த பூனையின்  சேட்டைகளை தாங்க முடியாத அக்கம்பக்கத்தினர் கென்னடியிடம் புகாரளித்து வந்துள்ளனர்.  இதனால், வருத்தமடைந்த கென்னடி வேறு வழியின்றி மன வேதனையுடன் கடந்த 30 ஆம் தேதி 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தளவானூர் என்ற கிராமத்தில் அந்த பூனையை விட்டுவிட்டு வந்துள்ளார். அதன்பிறகு, வருத்தம் தாங்க முடியாமல் கென்னடி பூனையை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். இந்த நிலையில் திடீரென வீட்டிற்கே அந்த பூனை திரும்பி வந்து கென்னடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பசியால் வாடி மெலிந்த நிலையில் இருந்த அந்த பூனையை பார்த்தததும் கண்ணீர் மல்க கென்னடி கட்டி அணைத்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை நெஞ்சுருக செய்தது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.