கொரோனா தொற்று காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் சந்தைப் பகுதியில் அதிகளவிலான பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் சந்தைப் பகுதியில் அதிகளவிலான பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காய்கறி சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் இன்றே கூட்டம் கூட்டமாக சென்று தேவையான பொருட்களை வாங்கியதால் சந்தைப் பகுதியில் மக்கள் நெரில் அதிகமாக காணப்பட்டது.
மதுரை, ஆரப்பாளையம் பைபாஸ் சாலைப் பகுதியில் உள்ள வாரச்சந்தையில் அதிகளவிலான பொதுமக்கள் குவிந்துள்ளதால் அங்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலூர், காந்தி ரோடு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதிகளவிலான மக்கள் குவிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் குழுமியதால் அங்கு அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.