திருவண்ணாமலையில், குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காப்புக் காட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலையில், குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காப்புக் காட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர். காப்புக்காடு பகுதியில்5 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காப்புக்காட்டில் குடியேறினர். மாவட்ட நிர்வாகம் விவசாய பகுதியில் குப்பை கிடங்கை அமைத்தால் கிராம மக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கிராமத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.