பிறவியிலேயே பேசும், செவித் திறனற்ற குழந்தைகள் - அறுவை சிகிச்சை மூலம் பேசவைத்த அரசு மருத்துவர்கள்
பதிவு : ஜனவரி 09, 2022, 02:28 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை பிறவியிலேயே பேசும் திறனற்ற 163 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை மூலமாக பேசும் திறன் கிடைக்க வைத்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை பிறவியிலேயே பேசும் திறனற்ற 163 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை மூலமாக பேசும் திறன் கிடைக்க வைத்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவின் மூலமாக இதுவரை பிறவியிலேயே பேச்சு மற்றும் செவித்திறன் இல்லாத163 குழந்தைகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவைசிகிச்சை மூலமாக அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 550 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மீது இரக்கப்பட்டாவது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.