கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கல் !

திருவள்ளூரில் கோழிப்பண்ணையில் 60 டன் ரேசன் அரிசி பதுக்கியது தொடர்பாக வெளியான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
x
திருவள்ளூரில் கோழிப்பண்ணையில் 60 டன் ரேசன் அரிசி பதுக்கியது தொடர்பாக வெளியான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பொதட்டூர் பேட்டை அடுத்த காவிரிராஜபேட்டையில் உள்ள கோழிப் பண்ணையில் ரேசன் அரிசி டன் கணக்கில் பதுக்கி வைத்திருப்பதாக இணையத்தில் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைக்கு சென்று அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்