பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார்" - "மோசடி நபருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் தொடர்பில்லை

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர், தன்னை உதயநிதி ஸ்டாலினுடைய உதவியாளர் என கூறியதில் எந்த உண்மையும் இல்லை என தெரிய வந்துள்ளது.
x
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர், தன்னை உதயநிதி ஸ்டாலினுடைய உதவியாளர் என கூறியதில் எந்த உண்மையும் இல்லை என தெரிய வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் புதூர் பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக, ராஜேஷ் என்பவர் நான்கரை லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றிய நிலையில், தேன்மொழியின் தோழிகளிடமும் ராஜேஷ் அதே போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும் ராஜேஷ் தன்னை உதயநிதி ஸ்டாலினின் உதவியாளராக காட்டிக் கொண்டதாக தேன்மொழி தரப்பில் புகார் எழுப்பப்பட்டது. இது பற்றி விசாரித்த போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கும், ராஜேஷுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் ராஜேஷ் எனற பெயரில் உதயநிதி ஸ்டாலினுக்கு உதவியாளர் யாரும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்