" நீட் தேர்வு ரத்து நிலைப்பாட்டில் அதிமுக உறுதி " - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் !

நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற விஜயபாஸ்கர், நீட் விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்றார். நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், நீட் விவகாரத்தில் மாணவர்கள் தவறான முடிவு எடுப்பதை தடுக்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டுமெனவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்