பேரவையில் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்...

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்த தொகுப்பை காணலாம்...
x
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்த தொகுப்பை காணலாம்...

முதலமைசர் ஸ்டாலின் தாக்கல் செய்த சென்னை மாநகர காவல் சட்டத்தை புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. 

தாம்பரம், காஞ்சிபுரம், சிவகாசி, கடலூர், கும்பகோணம், கரூர் ஆகிய 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் தொடர்பான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த 2022 தமிழக நிதி ஒதுக்க சட்ட மசோதா நிறைவேறியது.

23 சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் விளைப் பொருட்களை சந்தைப்படுத்துதல் திருத்த சட்ட மசோதா நிறைவேறியது.

தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிற்சிக்கழகத்தின் இயக்குனரை தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கல்வி மன்ற பதவி வழி உறுப்பினராக்கும் வகையில் தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர் தேர்வு செய்வதை அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைப்பதற்கான தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய கூடுதல் செயற்பணிகள் சட்ட மசோதா சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நகர ஊரமைப்பு சட்டத்தில் நிலம் அல்லது கட்டிட மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கான கால அளவை 5-ல் இருந்து 8 ஆண்டுகளாக உயர்த்துவது தொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்