முதல் தவணை தடுப்பூசி - 100% செலுத்திய கிராமம்
பதிவு : ஜனவரி 08, 2022, 06:11 AM
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இலக்கை எட்டிய கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா ஹா சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்  100 சதவீதம்  தடுப்பூசி செலுத்தி இலக்கை எட்டிய கிராம  ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர்  அமர் குஷ்வா ஹா சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். 


ஈச்சங்கால் ஊராட்சியில் பட்டதாரி இளைஞர் ஏழுமலை கிராம ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கிராமத்தில்  பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில், 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைவதற்கு வீடு வீடாக சென்று  சில்வர் பாத்திரங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தி வந்துள்ளார். இதையடுத்து 
இதில் 18 வயதிற்கு மேற்பட்ட 538 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சியாக ஈச்சங்கால் ஊராட்சி உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வா ஹா  பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.