குப்பையில் கிடந்த 9 சவரன் தங்க நகை.. உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்..!
பதிவு : ஜனவரி 08, 2022, 06:11 AM
புழல் அருகே குப்பையில் கண்டெடுத்த 9 சவரன் தங்க நகையை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
புழல் அருகே குப்பையில் கண்டெடுத்த 9 சவரன் தங்க நகையை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு விநாயகபுரம் காஞ்சி நகரில் குப்பையை சேகரித்த தூய்மை பணியாளர் சஞ்சீவிகுமார், அவற்றை குப்பை கிடங்கில் கொட்டியுள்ளார். அப்போது  அதில் தங்க நகை ஒன்று இருப்பதை கண்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், தனது தங்க நகையை காணவில்லை என காஞ்சி நகரில் வசித்துவரும் சீனிவாசன் தூய்மை பணியாளரிடம் தெரிவித்ததை அடுத்து, அவரிடம் அந்த தங்க நகை மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.