மருத்துவர் பழனிவேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம் !

சென்னை ஜெம் மருத்துவமனையின் சேர்மன் பழனிவேலுக்கு, ஆந்திராவை சேர்ந்த என்.டி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
x
சென்னை ஜெம் மருத்துவமனையின் சேர்மன் பழனிவேலுக்கு, ஆந்திராவை சேர்ந்த என்.டி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. விஜயவாடாவில் ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ விஸ்வபூஷன் ஹரிசந்தன் கலந்துக்கொண்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பழனிவேலுக்கு பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ரோபோடிக் அறுவை சிகிச்சையில் நவீனத்துவம், புற்றுநோய் சிகிச்சையில் புதிய நடைமுறைக்காக அவர் ஆற்றிய சேவையை பாராட்டி என்.டி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்