வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு
x
நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்திற்கு இந்த மாதம் 183 கோடியே 67 லட்ச ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த தொகையையும் சேர்த்து தமிழகத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை, ஆயிரத்து 836 கோடியே 67 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம், 9 ஆயிரத்து 871 கோடியை இன்று விடுவித்துள்ளது. இது மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மானியத்தின் 10-வது தவணையாகும். தகுதி வாய்ந்த மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 98 ஆயிரத்து 710 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்