அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடுகள் நிறுத்தம்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை நிறுத்தி வைக்கும்படி மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
வேலைகளை திடீரென நிறுத்திய மாநகராட்சி நிர்வாகம் வெளி வேலைகள் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தகவல்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் ஜனவரி 14 தைத் திருநாளன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.

இதற்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், பந்தக்கால் நடப்பட்டது தொடர்ந்து, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வரும் காளைகள் வரிசையாக நின்று வருவதற்காக சவுக்கு கம்புகள் நடப்பட்டது. தொடர்ந்து வாடி வாசல் அமைக்கும் பணி நடைபெற இருந்த சூழலில் திடீரென்று சாலையில் நடைபெற்றுக்கொண்டிருந்த பணிகளை நிறுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை உள் வேலைகளான வீரர்களுக்கு கொரோனா சோதனை செய்யும் இடம், ஜல்லிக்கட்டு காளைகளை கட்டி வைக்கும் இடம் போன்ற வேலைகளை மட்டும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சாலையில் நடப்பட்ட சவுக்கு கம்புகளை வெளியே எடுத்து விட்டனர். கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நேற்று சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ள நிலையில் இன்று காலை தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு வெளி வேலைகளை திடீரென்று நிறுத்தி உள்ளதால் பொது மக்களிடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற சூழலில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில். இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு குறித்து புதிய கட்டுப்பாடு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்