தமிழக எம்பிக்களை சந்திக்க அமித்ஷா மறுப்பது தமிழகத்தை அவமதிக்கும் செயல் - ஜவாஹிருல்லா

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவிப்பது தமிழகத்தை அவமதிக்கும் செயல் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
x
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவிப்பது தமிழகத்தை அவமதிக்கும் செயல் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,   நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும் என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்