904 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் - முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் 904 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
x
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், சென்னை மாநகராட்சியின் சார்பில் 504 ஆக்ஸிஜன் படுக்கை, 400 சாதாரண படுக்கை என மொத்தம் 904 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் சிகிச்சை மையத்திற்கு நேரடியாக சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.அப்போது, பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார். சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்கள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்