ப்ளஸ் டூ பொது தேர்வு : "தமிழ்வழி மாணவர்களுக்கு கட்டண விலக்கு"
பதிவு : ஜனவரி 05, 2022, 05:27 AM
தமிழ் வழியில் படித்து, ப்ளஸ் டூ பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
தமிழ் வழியில் படித்து, ப்ளஸ் டூ பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு,  தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ப்ளஸ் டூ மாணவர்கள், 20 ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தி வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி செய்முறை தேர்வு கொண்ட பாடங்களுக்கான தேர்வு கட்டணம் 225 ரூபாயும், செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள், மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியின, அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ் அல்லாத வேறு பயிற்று மொழியில் படித்து இருந்தாலும் கூட அவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பார்வையற்ற மாணவர்கள் , வாய் பேச முடியாத மாணவர்கள் மற்றும் காது கேளாத மாணவர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.