ஆதிபராசக்தி கோயிலில் ஆட்சியர் ஆய்வு
பதிவு : ஜனவரி 05, 2022, 03:11 AM
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கோவிலுக்கு சென்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். அங்குள்ள மருத்துவ குழுவிடம் கோயிலுக்கு வரும் பக்தர்களை தனியாக கண்காணிக்க குழு அமைத்திடுமாறும், அரசு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் இருமல், காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் உடனடியாக பரிசோதனை செய்திட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.