4 வயது சிறுவனுக்கு சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை - சென்னை மருத்துவமனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்
பதிவு : ஜனவரி 05, 2022, 01:03 AM
பெங்களூரூ சிறுவனுக்கு சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவர்களுக்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெங்களூரூ சிறுவனுக்கு சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவர்களுக்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா பல்நோக்கு  மருத்துவமனையில் பெங்களூரை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 4 வயது சிறுவனுக்கு, நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததால் ரேலா மருத்துவமனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதனை ஒட்டி, ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில், அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்று ரேலா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகமது ரேலாவிற்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர், சிறுவனுக்கு பதக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அணிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவர் ரேலா  அரசு மருத்துவமனைகளிலும் தமது சேவையை வழங்குவதாக கூறியதற்கு நன்றி தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.