நகர்புற உள்ளாட்சி தேர்தல் - வீடியோ பதிவு செய்ய உத்தரவு

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல், தேர்தல், வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் - வீடியோ பதிவு செய்ய உத்தரவு
x
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல், தேர்தல், வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதிபதிகள், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணைய விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமரா பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மாநில தேர்தல் ஆணைய ஒப்புதலை ஏற்று  சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  நகர்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த கோரி அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்