சென்னையில் அதிகரிக்கும் கொரோனா - மத்திய அரசு கடிதம்

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
x
சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் 
சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், தொடர்புகளை விரைவாக கண்டறிதல், வழிகாட்டு நெறிமுறைகளின்படி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை அறிவித்தல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆர்டிபிசிஆர் உள்ளிட்ட பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், நோய் தொற்றை தாமதமாக கண்டறிந்தால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்