கணவனை பிரிந்து வாழ்ந்த பள்ளி முதல்வர் சந்தேக மரணம்?
பதிவு : டிசம்பர் 05, 2021, 06:11 PM
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளியின் முதல்வரான 35 வயது பெண், விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்னிலம் அடுத்த பேரளத்தில் தனியார் உயர் நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியின் முதல்வராக சத்தியா என்ற வயது 35 பெண் பணியாற்றினார். கணவரை பிரிந்து 13 வயது மகளுடன் வாழ்ந்து வந்த அவர், நேற்று பள்ளியில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. அங்கேயே மயங்கி விழுந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி ஆசிரியை சத்தியா இன்று உயிரிழந்துள்ளார். அவரது உடல், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தாய், தந்தையுடன் மருதவஞ்சேரியில் வசித்த ஆசிரியை உயிரிழந்த விவகாரத்தில், சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.