மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதல் கணவன்
பதிவு : டிசம்பர் 05, 2021, 06:00 PM
ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு  தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நவனி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன்-நந்தினி தம்பதி, 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். கலப்பு திருமணம் செய்த அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, இன்றும் தகராறு ஏற்பட்ட நிலையில், மரம் வெட்டும் தொழிலாளியான 27 வயது தமிழ்ச்செல்வன், தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவர் தலைமறைவான நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலையான பெண்ணின் கணவன் தமிழ்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.