"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு
x
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய சுகாதாரதுறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மற்றும் வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் நோய் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூன்று மாவட்டங்களிலும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் நோய் பாதிப்பு விகிதத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் நோய் பாதிப்பு விகிதம் 37 புள்ளி 63 சதவீதமும், திருவள்ளூரில் 16புள்ளி 24 சதவீதமும்,சென்னையில் 16புள்ளி 09 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனை அதிகளவு மேற்கொண்டு  அதன் தொடர்புகளை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்