கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து
பதிவு : டிசம்பர் 04, 2021, 01:04 PM
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இவ்வாறு கூறியுள்ளார். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும் என்றும் தொற்றுத் தாக்கி விரைந்து மீண்டிருக்கிறேன் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.