"உயிருடன் இருக்கும் போதே இறுதிச்சடங்கு" - ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனை
பதிவு : டிசம்பர் 04, 2021, 12:39 PM
மியான்மர் சிறையில் விடுதலையாகி வந்த தமிழக மீனவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்தது நெஞ்சை பிழியும் விதமாக இருந்தது.
மியான்மர் சிறையில் விடுதலையாகி வந்த தமிழக மீனவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்தது நெஞ்சை பிழியும் விதமாக இருந்தது. 

நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 4 மீனவர்கள் அந்தமானைச் சேகர் என்பவரிடம் கூலிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அங்கிருந்து, அந்தமானைச் சேர்ந்த 4 பேர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 10 பேர் பிப்ரவரி 4ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில், எல்லை தாண்டியதாக மியான்மர் கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்துள்ளது. பின்னர், தனித் தீவுக்கு அழைத்துச் சென்ற கடலோர காவல்படை, கைகால்களை கட்டிப்போட்டும், கைவிலங்கு பூட்டியும் அடித்து உதைத்துள்ளனர். சிறையிலும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இதனிடையே, டெல்லி அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்த 4 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை சார்பில் வரவேற்கப்பட்டனர். டெல்லியில் இருந்த, அவர்களை தமிழக மீன்வளத்துறை, அழைத்துவந்ததாக நன்றி தெரிவித்த மீனவர்கள், கொடுமைகளை வேதனையுடன் விவரித்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.