உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.
உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா சில குறைபாடுகளை களைய வேண்டும் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி
x
உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார். விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், திருமணமான தம்பதிகள் மட்டுமே இந்த செயற்கை கருவுறுதலுக்கான தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது பாகுபாடு என்றார். இது மட்டுமின்றி அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி இருக்கக் கூடிய சமத்துவத்திற்கு எதிரானது என தெரிவித்தார். மேலும் கருமுட்டையை தானமாக வழங்குவோரை பாதுகாப்பதற்கு இந்த சட்டத்தில் பெரிய அளவில் விதிகள் எதுவும் இல்லை என தெரிவித்த அவர் மேற்கண்ட குறைகள் களையப்பட வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்