வெள்ளத்தில் மூழ்கிய விவசாய பயிர்கள் - விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, 500 ஏக்கருக்கும் மேலான நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கிய விவசாய பயிர்கள் - விவசாயிகள் கவலை
x
கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, 500 ஏக்கருக்கும் மேலான நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

தூக்கணாம்பாக்கம், பள்ளிப்பட்டு, கீழ் குமாரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பெய்யும் மழைநீர், பாகூர் வாய்க்கால் வழியாக புதுச்சேரியின் பாகூர் ஏரிக்கு செல்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள பாகூர் வாய்க்காலை தூர்வாரும் பணியை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக பாகூர் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என, கூறப்படுகிறது. இதன் காரணமாக, மழை காலத்தில் வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல், விளை நிலங்களுக்குள் பாய்ந்து 500க்கும் மேற்பட்ட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் கூறுகின்றனர். சிறிய பயிர்கள் முதல் அறுவடைக்கு தயாரான பயிர்கள் வரை தண்ணீரில் மூழ்கியதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்