முதலீட்டு செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி - கும்பலின் தலைவனுக்கு 2 நாள் சி.பி.சி.ஐ.டி காவல்

ஆன்லைன் முதலீட்டு செயலி மூலம் லட்ச கணக்கில் மோசடி செய்த, கும்பல் தலைவனுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு.
முதலீட்டு செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி - கும்பலின் தலைவனுக்கு 2 நாள் சி.பி.சி.ஐ.டி காவல்
x
ஆன்லைன் முதலீட்டு செயலி மூலம் லட்ச கணக்கில் மோசடி செய்த, கும்பல் தலைவனுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு.

பவர் பேங்க்(power bank) எனும் செயலி மூலம் முதலீடு செய்தால், குறைந்த காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என கூறி, நாடுழுவதும் சுமார் 150 கோடிக்கு மேல் மோசடி செய்த கும்பலை டெல்லி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழகத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் இந்த கும்பல் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்த‌து. இதையடுத்து அந்த கும்பலின் தலைவனாக கருதப்படும் அவிக் கெடியாவிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றத்திடம் தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் அனுமதி பெற்றனர். இதையடுத்து சென்னை அழைத்து வரப்பட்ட அவிக் கெடியாவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து அவிக் கெடியாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி-க்கு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்