"சென்னை பெண்களின் ஆயுட்காலம் அதிகம்"

மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், சென்னையில் வாழும் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
x
மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், சென்னையில் வாழும் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாட்டில் உள்ள முக்கிய ஐந்து பெருநகரங்களில், சென்னையில் உள்ள பெண்களே உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவது தெரியவந்துள்ளது. 

சென்னையில் உடல் பருமனுக்கு 41 புள்ளி 9 சதவீதம் பெண்களும், டெல்லியில் 41 புள்ளி 8 சதவீதம் பெண்களும், பெங்களூருவில் 40 புள்ளி 1 சதவீதம் பெண்களும், கொல்கத்தாவில் 29 சதவீதம் பேரும், மும்பையில் 25 சதவீத பெண்களும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். 

சென்னையில் ஆயிரம் ஆண்களுக்கு ஆயிரத்து 37 பெண்கள் இருப்பதும், மற்ற பெருநகரங்களை ஒப்பிடுகையில், சென்னையில் வாழும் பெண்களின் ஆயுட் காலம் அதிகம் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தமிழக நகர்புறங்களில் சாலை விபத்து, தற்கொலை மற்றும் மாரடைப்பு காரணமாக அகால மரணமடையும் ஆண்கள் அதிகம் என்றும், இதனால் பாலின விகிதத்தில் பெரிய வித்தியாசம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்