ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
பதிவு : நவம்பர் 30, 2021, 05:40 PM
ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தலால், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தலால், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய இயக்குனருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மொரீஷியஸ், போஸ்ட்வானா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், வங்கதேசம், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு, விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

பரிசோதனை முடிவுகள் வரும்வரை விமான நிலைய வளாகத்திலேயே பயணிகளை தங்க வைக்க வேண்டும் என்றும் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்தால், விமான பயணிகளை ஏழு நாட்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

ஏழாம் நாள் முடிவில் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதில் நெகட்டிவ் என வந்தால், ஏழு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.