"குழந்தைகளுடன் தவிக்கிறோம்" - கடலூர் மக்கள் வேதனை
பதிவு : நவம்பர் 30, 2021, 05:03 PM
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், செம்மண்டலம், வெள்ளப்பாக்கம், நெல்லிக்குப்பம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், 16 ஆயிரத்து 500க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் சேதம் அடைந்தன. தற்போது 4 நாட்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையால், கோண்டூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், பாதிரிகுப்பம், கூத்தப்பாக்கம், உள்ளிட்ட பல பகுதிகள் தனித்தீவைப் போல் காட்சியளிக்கின்றன. அதிலும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை மீண்டும் மீண்டும் மழை வெள்ளம் சூழ்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்கள் வீடுகள் பகுதியில் இருந்து வெளியில் வரமுடியாமல் கடுமையாக தவித்து வருகின்றனர். இதனால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.