பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு - வெற்றிப் படங்களின் நடன இயக்குநர் சிவசங்கர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடன இயக்குநர் சிவசங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திரையுலகில் அவர் ஜொலித்த தருணங்களை நினைவுகூரும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு - வெற்றிப் படங்களின் நடன இயக்குநர் சிவசங்கர்
x
800-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்...

நான்கு முறை தமிழக அரசின் விருது...

ஒரு முறை தேசிய விருது...

நடனத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மாஸ்டர் சிவசங்கர்...

1948ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சிவசங்கர், நடநத்தின் மீதான ஆர்வத்தால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தலைதிறந்த நடன இயக்குநராக வலம் வந்தவர்...பூவே உனக்காக, சூர்யவம்சம், சுயம்வரம், வெற்றிக் கொடி கட்டு, திருடா திருடி என பல வெற்றிப் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார், சிவசங்கர்.திருடா திருடி படத்தில் வெளியாகி, பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த மன்மத ராசா பாடலின் நடன இயக்குநர் இவர்தான்...வரலாறு படத்தில் நடிகர் அஜித்தை, நளினம் ததும்பும் பரதநாட்டியக் கலைஞராக காட்டிய பெருமை மாஸ்டர் சிவசங்கரையே சேரும்...பூவே உனக்காக, விஷ்வ துளசி, வரலாறு, உளியின் ஓசை உள்ளிட்ட படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடன இயக்குநர் விருதை வென்று இருக்கிறார், சிவசங்கர்.தெலுங்கு திரைத்துறையிலும் தன்னிகரற்ற நடன இயக்குநராக தடம் பதித்த இவர், இயக்குநர் ராஜ மவுலியின் பிரமாண்ட படைப்புகளான மகதீரா மற்றும் பாகுபலியில் சிலிர்க்க வைக்கும் நடனங்களை இயக்கியவர்...மகதீரா படத்தின் தீரா தீரா நடனத்தின் மூலம் பலரையும் சிலாகிக்க வைத்த சிவசங்கர், இதற்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார். நடன இயக்குநராக மட்டுமின்றி பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் சிவசங்கர் நடித்து உள்ளார்.வரலாறு, பரதேசி, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு என இவர் நடித்த படங்களில் பட்டியல் நீள்கிறது..மனைவி மற்றும் 2 மகனுடன் வசித்து வந்த சிவசங்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரின் மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்