"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
x
முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ராஜா அண்ணாமலை மன்றத்தில், 2 ஆயிரம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் நேரடியாக பார்த்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, மழை வெள்ளம் பாதித்த இடங்களை முதல்வர் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்