அமைச்சருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - மா.சுப்பிரமணியனுக்கு முதல்வர் வாழ்த்து

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - மா.சுப்பிரமணியனுக்கு முதல்வர் வாழ்த்து
x
உலக தமிழ் நிறுவனம் சார்பில் லண்டன் 4வது சர்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் வழங்கும் விழா, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவரது சார்பில் அவரது மகனும் மருத்துவருமான இளஞ்செழியன் மற்றும் அவர் மருமகள் கிரீத்தா இளஞ்செழியன் ஆகியோர் பெற்று கொண்டனர். இது தொடர்பான வீடியோவை அமைச்சர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், விருது பெற்ற அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர், சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, மாரத்தான் வீரராக தன்னை நிரூபித்த மா. சுப்பிரமணியன், தற்போது மருத்துவத்துறை அமைச்சராகவும் தனது ஆற்றலை நிரூபித்து பெற்றிருக்கும் 'அவுட் ஸ்டாண்டிங் ரெஸ்பான்ஸ் ஃபார் கொரோனா' என்ற விருதுக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்