திருவள்ளூரில் மழை பாதிப்பு பகுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

திருவள்ளூரில் மழை பாதித்த பகுதிகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூரில் மழை பாதிப்பு பகுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. கூவம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, திருவேற்காடு பத்மாவதி நகரில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதியை ஆய்வு செய்தார். மேலும், முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதேபோல், பூந்தமல்லியிலும் முதலமைச்சர் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவினார். தொடர்ந்து, கூவம் நதியை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து மற்ற பகுதிகளையும் பார்வையிட்டார்.  இந்த ஆய்வின்போது, முதலமைச்சருடன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளுர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்