"ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்" - ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

காற்றின் தரத்தை கண்காணிக்கும் வகையில் 17 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் - ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
x
காற்றின் தரத்தை கண்காணிக்கும் வகையில் 17 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும், 1  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை நிறைவேற்றும் விதமாக "ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்" அமைக்கவும், 17 மாவட்ட தலைமையகங்கள் மற்றும் நகரங்களில்  64 கோடி ரூபாயில் காற்று தர கண்காணிப்பகம் அமைப்பதற்காக அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பலூர், சிவகங்கை, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்று தர கண்காணிப்பகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக 
 காற்றின் தரம், நீர் தரம், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ளப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்