கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமம் - பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட சபாநாயகர்

கடல் அரிப்பு பாதிப்புகளை பார்வையிடச் சென்ற சபாநாயகரிடம், மீனவ கிராம மக்கள், தூண்டில் வளைவு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமம் - பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட சபாநாயகர்
x
கடல் அரிப்பு பாதிப்புகளை பார்வையிடச் சென்ற சபாநாயகரிடம், மீனவ கிராம மக்கள், தூண்டில் வளைவு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை மீனவ  கிராமத்தில் இயற்கை சீற்றம் மற்றும் கனமழையால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 100 மீட்டர் தூரம் வரைக்கும் ஏற்பட்ட கடல் அரிப்பால் இப்பகுதியில் படகுகளை கூட நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் கடற்கரையில் உள்ள தேவாலயம், கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், கூட்டப்பனையில் கடல் அரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற தமிழக சபாநாயகர் அப்பாவுவிடம், அப்பகுதி மக்கள் தூண்டில் வளைவு  அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி உள்ளதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்