அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்?

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
x
தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள், பார்க்கலாம்..,

இது, ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி. அங்கு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரத்து 61 மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியின் உள்ளே சென்றால், வகுப்பறைக்கு முன்பு, ஊஞ்சலில் ஆடும் தொட்டிச் செடி வரவேற்கிறது. அருகேயே சோர்வு ஏற்படும் போது ஆடி உற்சாகப்படுத்திக்கொள்ள மாணவிகளுக்கும் ஊஞ்சல் உள்ளது. பிளாஸ்டிக் தவிர்ப்பு, சுடு தண்ணீரில் பாத்திரம் கழுவுதல், சுத்திகரிக்கப்பட்ட சூடான குடிநீர், சரியான பதத்தில் வேக வைத்த உணவா என பரிசோதிப்பது உள்ளிட்ட ஒவ்வொன்றும், அந்த பள்ளியின் சமையல்கூட சாதனைகள்.

பள்ளி தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் காய்கறி, வாரத்தில் ஒருநாள் சமையலுக்கு வருகிறது. காய்கறிகளை மஞ்சள் மூலம் கழுவிய பின் பயன்படுத்தியும் அசர வைக்கின்றனர். 4 முறை ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ குழு, தற்போது, அரசு மாநகராட்சிப் பள்ளியின் சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ சான்று வழங்கியுள்ளது. தந்தி டிவிக்காக, ஈரோடு செய்தியாளர் மக்புல் அகமது...

Next Story

மேலும் செய்திகள்