சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட மழை

சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மீண்டும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
x
சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மீண்டும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

கனமழை வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை வாசிகள், தற்போது மீண்டும் தொடர் கனமழையால் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வேளச்சேரி அடுத்த நாராயணபுரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறிதால், கோவிலம்பாக்கம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.

கோடம்பாக்கத்தில் முக்கிய பகுதிகள், தி.நகரில் அபிபுல்லா சாலை, பார்த்தசாரதிபுரம் பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள போஸ்டல் காலனி, ஏரிக்கரை சாலை பகுதியில் மழை நீரோடு கழிவு நீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கே.கே. நகரில் அண்ணா மெயின் ரோடு சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

தொடர் மழை காரணமாக பட்டாளம் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியது. அந்த பகுதியில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது

வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், இரண்டு மாநகர பேருந்துகள் அங்கு சிக்கிக்கொண்டதால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதித்தது

ஆவடி, திருநின்றவூர் பகுதிகளிலும் தொடர் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியதோடு, குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.



Next Story

மேலும் செய்திகள்