ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
x
நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். சில நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில், முக்கிய விஷயங்கள் குறித்து முதலமைச்சர் ஆளுநரிடம் பேசியுள்ளார். குறிப்பாக செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவது,  2 மாதங்களுக்கு மேலாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதில் இருக்கும் தாமதம் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள  பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார். அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உயர் அதிகாரிகள் சிலர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர். 



Next Story

மேலும் செய்திகள்