"1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு" - தமிழக அரசு அறிவிப்பு

"1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு" - தமிழக அரசு அறிவிப்பு
1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு -  தமிழக அரசு அறிவிப்பு
x
"1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு" -  தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தமிழகத்தில் 56 ஆயிரத்து 229 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, புதிதாக 1 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிசக்தி , மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில் நுட்பம், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 56 ஆயிரத்து 229 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 1 லட்சத்து 74 ஆயிரத்து 999 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு  ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் தமிழக முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிபடுத்தும் வகையில், இந்த முதலீடுகள், அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்